Thursday, January 14, 2010

சொகுசு வாழ்க்கை

உண்மையில் சொகுசு வாழ்வு வாழ்வது யார் என்று நீங்கள் எண்ணி பார்த்ததுண்டா?

அமெரிக்கரா? ஐரோபியரா? ஆஸ்த்ரேலியரா ? யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தியர் என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

எப்படி இந்தியர்?
சொகுசு என்பதற்கு அர்த்தம் என்னவென்று எண்ணி பாருங்கள்? கஷ்ட்டபடாமல் உண்ண உணவோ, அல்லது விரும்பிகின்ற உடை அணிந்தோ அல்லது நம் மனம் போன போக்கிலே வாழும் வாழ்க்கையை தான் நாம் சொகுசு என்கிறோம்.

இன்று ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் ஒரு கலர் டிவி உள்ளது. அப்படி இல்லாவிடினும் அதை இலவசமாக அரசாங்கமே வழங்குகிறது. எந்த நாட்டிலாவது இப்படி ஒரு நடை முறை உள்ளதா என்று எண்ணி பாருங்கள்? ஆக நல்ல படி பொழுது போக்க ஒரு டிவி உள்ளது? அனால் இந்த டிவியை கண்டு பிடித்தது ஒரு இந்தியானா? இதை கண்டு பிடிக்க எந்த அளவு ஒரு மனிதன் எவ்வளவு உழைத்திருப்பான் என்று சிந்தித்து பாருங்கள்.

உலகமே தொழில் புரட்சியில் வளர்ந்துகொண்டு இருந்த நேரத்தில் , நமது முன்னோர்கள் சிற்பமும் கோவிலும் கட்டி கொண்டு இருந்தார்கள். எந்த ஒரு புது குடியிருப்பு ஒரு இடத்தில உருவாகும் போதும், மக்களக்கு வரும் எண்ணம் " அட ஒரு கோவில் இருந்தால் நன்றாக இருக்குமே! கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது!" என்பது தான். கோவில் கட்டி முடித்து விட்டாவது எதாவது ஊருக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்தால், அடுத்து கும்பாபிசேகம் , மார்கழி பூஜை என்று அமர்க்கள படுத்துவார்கள். பிச்சைக்காரர்கள் உருவாகும் இடம் எதுவென்று பார்த்தால் அது கோவிலாக தான் இருக்கும். நான் கோவிலுக்கு வெளியில் பிச்சை எடுப்பவரை சொல்லவில்லை. கோவிலுக்குள்ளே பிச்சை எடுப்பவர் தான் அதிகம். நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று ஒரு பிச்சை, தொழில் லாபம் பெற வேண்டும் என்று ஒரு பிச்சை இப்படி பல விதம். நமது வாழ்வில் சொகுசு முதல் முறையாக எட்டி பார்ப்பது கோவில்களில்தான்.
மற்ற நாடுகளில் நிற்பதற்கே நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கும் நேரத்தில் நம்மவர்கள் பாலபிசேகமும் நெய் அபிசேகமும் பார்த்து கொண்டு இருகிறார்கள். தோல்வி ஏற்படும் பொது எல்லாம் போராட்ட குணம் குன்றி கடவுளிடம் சரணடைந்து விடவே பலர் விரும்புகின்றர். "எல்லாம் அவன் பார்த்துக்குவான்" . இந்த சொல்லில் எத்தனை சொகுசு என்று கணக்கிட்டு பாருங்கள்.

கடவுளையும் கலையையும் விடுங்கள். காதலையும் சொகுசாசக செய்வது தான் நம் தனி சிறப்பு. அமெரிக்கா போன்ற நாடுகளில் 16 வயதுக்கு மேல் ஒரு துணையை கண்டறிந்தே ஆக வேண்டும். சாகசங்களும் நவரசங்குளும் பல புரிந்து எதிர் பாலினரை ஈர்க்க வேண்டும். ஆனால் நம் நிலையை பாருங்கள். அழகாக அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ சென்று எனக்கு நல்ல படித்த நல்ல அழகான ஒரு பெண் வேண்டும் என்று சொல்லிவிட்டு அவரவர் அவர் வேலையை பார்த்து கொண்டு இருக்கலாம். பத்து பெண்களை பார்த்து ஒரு பெண்ணை தேர்ந்து எடுக்கும் சொகுசு நமக்கு மட்டும் தான் உள்ளது.

அடுத்து அறிவியல். கணிப்பொறி செல்போன் என்று யாரோ கண்டு பிடித்து கொண்டு இருக்க, நாம் இவற்றை நன்றாக உபயோகிக்கிறோம். இது போதாது என்று ஆயுத பூஜை அன்று பட்டை போட்டு வணங்க வேறு செய்கிறோம். பேருந்தில் சொகுசாக பயணம் செய்யும் முன்னர் முனியப்பனக்கு நான்கு எழுமிச்சை பழங்கள் அன்பளிப்பு வேறு. அடுத்தவர்கள் கண்டு பிடித்ததை பாடத்தில் படித்து கொண்டு கிளி பிள்ளை போல நம் வேலையில் அப்படியே செய்கிறோம்.கூகிள் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஏன் நம் நாட்டில் இருந்து வரவில்லை?  இன்போசிஸ் விப்ரோ போன்று மக்கள் சமுத்திரத்தை வெய்து கொண்டு குமாஸ்தா வேலை தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

இப்படி பல வழிகளிலும் சொகுசாக யார் வாழ்கிறார் என்று எண்ணி பாருங்கள். இந்தியர் என்று பதில் தான் உங்களிடமும் வருகிறாதா?

"
சிரித்து வாழ வேண்டும் 
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே 
உழைத்து வாழ வேண்டும் 
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதேஎன்ற எம்ஜியார் பாடலின் அர்த்தத்தை தேடுங்கள்.

5 comments:

  1. Siva,

    Well written! I welcome you to write more and make the younger generations think. As Indians, we have a lot of potential than anyone in the world!

    Great work! - Arun.

    ReplyDelete
  2. Welcome to blogging. Nice posts and quite appropriate MGR songs. Good going.

    ReplyDelete
  3. >>உலகமே தொழில் புரட்சியில் வளர்ந்துகொண்டு இருந்த நேரத்தில் , நமது முன்னோர்கள் சிற்பமும் கோவிலும் கட்டி கொண்டு இருந்தார்கள்.<<

    உங்களுடைய ஆதங்கம் நியாயமானதாக இருந்தாலும், உங்களுடைய இந்த வாக்கியத்தை மறுக்கிறேன். கலை மனித நாகரிகத்தின் முக்கியமான மைல்கல். அதுவுமல்லாமல், நமது முன்னோர் பெரும்பான்மைக் கோவில்கள் கட்டிய காலங்கள் 7ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை. தொழில்புரட்சி ஏற்பட்டது 18ம் நூற்றாண்டு முதல்.

    ReplyDelete
  4. Welcome shiva ,

    Nice to see your blog, i believe u r reading more about periyar .. welcome .. Nice one write more ..

    ReplyDelete
  5. * இந்தியாவில் குடும்பம் என்பது ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் . பிடிக்கிறதோ இல்லையோ பெற்றவர்களுகாய் சிறிது நாட்கள் , பெற்றுவிட்ட பின் பிள்ளைகளுக்காக சிறிது வருடங்கள் என ஒற்றுமையாய் இருக்க வேண்டிய சமுதாய கட்டாயங்கள் உண்டு இப்போது . அமெரிக்காவில் அது போல் இல்லை . இங்கும் வீர தீர சாகசங்கள் 20௦ வருடங்களுக்கு முன்பும் இருந்தது . கல்லை தூக்குவது ,காளையை அடக்குவது , சிலம்பம் விளையாடி ஜெயிப்பது ..இதெல்லாம் உண்டு .இப்போது உங்களை போயி காளையை அடக்குங்க சிவா அப்டினா நீங்க என்ன சொல்லுவீங்க ..எதாவது கம்ப்யூட்டர் விளையாட்டு சொல்லுங்கனு கேட்ருபீங்க...இல்லேன அந்த பொண்ணே வேணாமின்னு ஓடிருபீங்க.

    * வெளிநாட்டுலே பதினெட்டு வயதில் துணை தேட அனுமதி இருப்பது போல ஒருவனின் மனைவி அவன் பெற்றவரோடு ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயம் இல்லை . இங்கே கல்யாணம் இருவர் இணைகிற விஷயம் மட்டுமில்லை ,இரு குடும்பங்களின் இணைப்பு .
    பெற்றவரை புகார் சொன்னாலோ ,உதாசீன படுத்தினாலோ , அந்த துணையின் மேல் இன்னொருவருக்குமுழுமையான பிரியம் ஏற்படாது.நம் மீது காட்டபடுகிற அன்பு நம் பெற்றோர் மீதும் காட்ட படவேண்டும் என எதிர்பார்க்கிறோம் . ஆகவே நம் திருமணங்களை நம் பெற்றோர் முடிவு செய்கின்றனர்


    * நம் சமுதாயம் எப்படி இருக்கிறதென்றால் நீங்கள் பதினெட்டு வயதில் திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு போகலாம் .ஆனால் ஒரு பெண் ஐம்பதிலும் திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு போக முடியாது .. செக்குமாடாய் கடமைகளில் சிக்கி பெற்ற மக்களுக்காய் வாழ்ந்து விட்டு தனக்கென ஓய்வை தேடி போகிற இடமாய் கண்டுபிடிகப்பட்ட இடமே கோவில் .வெளிநாட்டினான் வருடத்துக்கு ஒரு முறை காசு சேர்த்து vacation என்று ஒரு மாதம் போகிறது போல இந்தியாவில் செயல்படுகிற குடும்பங்கள் குறைவு .காசு செலவு செய்யாமல் அருகில் இருக்கிற இடத்துக்கு ஒரு மாற்றத்தை தேடி சிறிது நேரம் சென்று வருவதன் நோக்கமே கோவில் .சும்மா போயி உட்காந்தாலே ஊர்வம்புக்கு என்றாகி விடுமே .. அது தான் இத்தனை சடங்குகள்.

    * மேலை நாட்டினன் மட்டுமே கண்டுபிடிக்கிறான் என்று சொல்கிறீர்கள் . நாமும் தான் மஞ்சளில் மருத்துவ குணம் உள்ளது . வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதை கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால் மஞ்சளுக்கான patent உரிமையை மட்டும் அவர்கள் வைத்திருகிறார்கள்.. இது அயோக்கியத்தனம் இல்லையா ?அவரவர் வாழ்க்கை தன்மைக்கேற்ப நாமும் கண்டுபிடித்திருக்கிறோம் . ஒப்பீடுகள் தேவையா ?
    * கூகிள்,மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் உருவானதற்கு காரணம் அங்கே தொழில் தொடங்குவதற்கான சட்ட திட்டங்கள் எளிதானவை .இங்கே அனுமதி வாங்குவதற்கென்றே தனியாய் செலவழிக்க வேண்டி இருக்கிறது
    * கண்டுபிடிகிரவன் யாராக இருந்தால் என்ன ? நாம் சொகுசு வாழ்கை வாழவில்லை .துணி நெய்யும் எந்திரத்தை வெளிநாட்டினர் கண்டுபிடித்தாலும் நாம் உழைத்தே வாழ்கிறோம் . இதே அமெரிக்காவில் எத்தனை உணவு பொருட்களை இறக்குமதி செய்கிறார்கள் . அந்த வகையில் அவர்கள் சொகுசு வாழ்கை வாழவில்லையா. ஒரு சில முதலாளிமார்களை , பிச்சைகாரகளை , அரசியல்வாதிகளை தவிர இந்தியாவும் உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுதான்.

    ReplyDelete