Thursday, January 14, 2010

கூலி?

இப்பொழுதெல்லாம் கூலிக்கு ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டம் ஆகிவிட்டது என்ற புலம்பல் மிக அதிகாமாகி வருகிறது.
கூலிக்கு வருபவன் இருபது ஆயிரம் முன் பணம் கொடுத்தால் தான் வருகிறான். தொழில் செய்வதே இப்பொழுதெல்லாம் கஷ்டம் ஆகி விட்டது என்ற புலம்பல் வேறு. இதை போன்று புலம்புவர்களில் நீங்களும் ஒருவரா? இனி நான் கேட்க போகும் கேள்விகள் உங்களக்குகாக தான்.

கூலி என்றால் கடைசி வரை ஏவல் வேலைகளை செய்து விட்டு சாக வேண்டியது தானா? அவர்களுக்கும் உங்களை போன்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாதா?
தான் படிக்காவிட்டாலும் தன் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நினைப்பு ஒரு கூலிக்கு இருக்க கூடாதா?

நூல் விலை சந்தையில் ஏறி விட்டால் அது உங்களை பாதிக்கிறது என்கிறீர்கள். உங்கள் லாபத்தில் கொஞ்சம் குறைகிறது என்கிறீர்கள்? நூல் விலை குறையும் பட்சத்தில் என்றாவது கூலியை உயர்த்த வேன்றும் என்ற எண்ணம் வந்துள்ளதா உங்களக்கு?

தீபாவளி பொங்கல் போன்ற விழாக்களின் பொழுது வெறும் ஐநூறு அல்லது ஆயிரம் மட்டும் போனசாக தரும் ஏராளமான கடைகளை நான் பார்த்து இருக்கிறேன் உங்கள் வீட்டுக்கு ஐநூறு ஆயிரம் ருபாய் பட்டாசு வாங்குவதற்கே செலவாகும் பொழுது, கூலி தான் பெற்ற ஐநூறு ரூபாயில் தன் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்குவானா அல்லது மனைவிக்கு ஒரு நல்ல புடவை வாங்கி கொடுக்க தான் முடியுமா? இதில் முதலாளிகள் கூறும் இன்னொரு வியாக்கானம் " அது தான் வருடம் முழதும் உன் வேலைக்கு உத்திரவாதம் தருகிறேன். அப்புறம் எதற்கு தனியாக போனஸ் " என்பது.

இங்கு பல கடைகள் தங்கள் லாபத்தை கணக்கிடுவதே கூலி வயிற்றில் அடித்து தான். கூலி பத்து பைசா ஏற்றினால் நமக்கு மாதம் ஆயிரம் ருபாய் நஷ்டம் என்ற எண்ணம் தான் எப்பொழுதும் மேலோங்கி நிற்கும்.

அய்யா முதலாளிகளா ! இன்னும் எத்தனை காலம் தான் கூலிகளை ஏமாற்றி கொண்டு இருப்பீர்கள்? கூலிகள் இன்று விழித்தெழ தொடங்கி இருகிறார்கள். நீங்கள் எப்படி கடன் வாங்கியாவது கடைக்கு முதல் சேர்க்கிறீர்கள்? அது போல் கூலிகள் கடன் வாங்கியாவது தன் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். இது அவர்கள் எதிர் காலத்தில் போடும் முதல் போல.

உங்கள் போக்கில் இனியும் மாற்றும் இல்லாவிடில் , இன்று கிடைக்கும் ஒன்று இரண்டு ஆட்கள் கூட வேறு வழியை பார்த்து சென்று விடுவார்கள். அவர்களை உங்கள் பங்குதாரர் போல் நடத்துங்கள். அவர்கள் ஈடுபாடுடன் வேலை செய்தால் நீங்களும் லாபம் அடையலாம் அவர்களும் தம் வாழ்வில் முன்னேறலாம்.

"இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும்
பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்" என்ற எம்ஜியார் பாடலை மனதில் நினையுங்கள்

No comments:

Post a Comment