Tuesday, January 26, 2010

ராகு காலம் அஷ்டமி நவமி

எந்த நேரத்தில ஆரம்பிச்சோனோ தெரியல இப்படி ஆயிடுச்சே! இப்படி ஒருவர் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்க, "அதான் நான் முதலையே சொன்னேன். நல்ல நேரம் பார்த்து பண்ணனும்னு ! என் பேச்சை யாரவது கேட்டா தானே " என்று நாம் கேட்பது அன்றாட வாழ்வில் நாம் பழக்க பட்ட ஓன்று தான்.

பிரச்சனைகள் அதிகமாக அதிகமாக மனிதனின் மனம் எதை சொன்னாலும் நம்பிவிடும். அது போல தான் இந்த சமயமும் சடங்குகளும். நாம் பிறக்கும் பொழுது என்ன நேரத்தில் பிறக்கிறோம் என்று பார்த்து பிறப்பதில்லை. நாம் உணவு உண்ணும் பொது எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்ற வரைமுறை இல்லை. ஒரு சினிமா சென்று பார்கையில் நல்ல நேரத்தில் தான் சென்று பார்க்க வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. இப்படி வாழ்வில் நாம் தினமும் செய்யும் வேலைகளுக்கு ராகு காலம் எமகண்டம் இல்லை. ஆனால் வாழ்வில் நாம் முக்கிய முடிவு எடுக்கும் பொழுது நமக்குள் ஒரு பதற்றம். நாம் எடுக்கின்ற காரியம் நல்ல படி முடியவேண்டும் என்ற ஒரு ஆதங்கம். இந்த நேரத்தில் தான் நமக்கு அசாதாரண நம்பிக்கை உண்டாக்க ஒரு செய்கை தேவைப்படுகிறது. அந்த செய்கை தான் நல்ல நேரம் பார்ப்பது.

நல்ல நேரத்தில் ஒரு காரியம் தொடங்கி அது நடக்காவிட்டால் எப்படியும் நம்மை நாம் சமாதானம் பண்ணி கொள்ள தவறுவிதில்லை. அந்த சமாதனத்தை ஏன் முன்னமே ஒரு மாற்று திட்டமாக வைத்து கொள்ள கூடாது?

சில சமயங்களில் ராகு காலத்தில் வேலை தொடங்கிவிட்டோமே என்ற பதைபதைப்பில் நன்றாக சென்று கொண்டிருக்கும் காரியத்தை நழுவ
விட்டவர் பலர்.

அடுத்து ஒரு வீட்டு உபயோக பொருள் வாங்குவது என்றால் அஷ்டமி நவமி பார்த்து வாங்குகிறோம். நல்ல நேரத்தில் மட்டும் வாங்கிய ஒரு பொருள் ரிப்பேர் ஆகாமல் ஓட வேண்டும் என்றால், அனைத்து தொழிற்சாலைகளும் மூடு விழா காண வேண்டியது தான். அப்படி என்றால் அந்த தொழிற்சாலை அஷ்டமி நவமி அன்று தொடங்க பெற்று இருக்குமோ? நேரத்தின் மேல் வைக்கும் நம்பிக்கையை அந்த பொருளை கண்டு பிடித்தவன் மேல் வையுங்கள்.

வாரத்தில் சனி கிழமையன்று ஒரு பொருள் வாங்க கூடாது என்று ஒருவர் சொல்லியும் எனது வீட்டிற்கு வாஷிங் மெசினும் ப்ரிட்ஜும் வாங்கினேன்.அன்று அஷ்டமி தினமும் கூட. இருந்தாலும் என்ன தான் நடுக்கும் என்று வாங்கி வைத்தேன். ஐந்து வருடமாக அது ஒழுங்காக தான் ஓடி கொண்டிருக்கிறது.

விதண்டாவாதம் செய்வது எனது நோக்கமல்ல. உண்மையை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். அடுத்த முறை ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது நாட்காட்டியை தேடாதிர். உங்கள் மனதில் நம்பிக்கையை தேடுங்கள்.வெற்றி நிச்சயம் கிடைக்கும். வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

"நடக்கும் என்பார் நடக்காது
 நடக்காது என்பார் நடந்துவிடும்.
 கிடைக்கும் என்பார் கிடைக்காது
 கிடைக்காது என்பார் கிடைத்துவிடும்"

3 comments:

  1. Enna Siva, ore philosophy ellam pesuriga. enna aachu? :)

    The article looks good. Thanks for posting

    ReplyDelete
  2. I agree with ur words.நல்ல படிச்சவங்க கூட இப்படி ஜோசியத்தை நம்பறது சின்ன வயசுலே இருந்தே நம்ம மேல திணிக்க படுகிற நம்பிக்கைகளை கேள்வி கேக்காமே, பதில் தெரியாமே ஏத்துகிறதும் ஒரு காரணம்

    ReplyDelete
  3. U can start to read KANNADASAN's "Aarthamulla Indhu Madham" ..might get answers for these stuffs..

    ReplyDelete